Thursday 31 January 2013

மானுடா!

வேதங்கள் நான்கு...
பூதங்கள் ஐந்து....
நாதங்கள் ஏழு....
மாதங்கள் பன்னிரண்டு...

இத்தனையும் இருந்தாலும்
பித்தனாம் மனிதனிடம்
எத்தனையோ பேதங்கள்....
எத்தனையோ பாவங்கள்....
அத்தனையும் மானுடத்தை
ஆட்டி வைக்கும் சாபங்கள்....

நண்பர்களே வாருங்கள்...
நேசக் கரம் தாருங்கள்...
நட்பென்னும் ஒளி வீசி
இருள் துடைப்போம் வாருங்கள்....

தாயின் துடிப்பு

 
உனக்காய் துடித்த ஓர் இதயம்
உனக்காய் மட்டுமே துடித்த ஓர் இதயம்
ரத்தத்தை உணவாய் மாற்றிய ஓர் இதயம்
அதை உனக்காய் பரிமாறிய ஓர் இதயம்
நீ கேட்டதெல்லாம் கொடுத்த ஓர் இதயம்
செய்த சேட்டை எல்லாம் பொறுத்த ஓர் இதயம்
இன்று துடிக்கிறது!
இன்றும் கூட துடிக்கிறது முதியோர் இல்லத்தில்!
என் மகன் எப்படி இருக்கிறானோ என நினைத்து?

தமிழ் தாய்

எழுந்ததும் வந்தாள் எனை நோக்கி
அவள் கண்கள் இரண்டையும் அனலாக்கி
அவள் கொண்ட பார்வையோ அனலாக
நான் நின்ற நிலையோ சிலையாக
வந்தது சிற்பமா? அல்ல
என் உயிர் போனது அற்பமா மெல்ல!
கொண்ட நிலை தெரியாது
வந்த நிலை புரியாது
மெல்லமாய் வினவினேன் அவளை
செல்லமாய் குலவினாள் அவளோ!
நிந்தன் தமிழ் பற்று கண்டு வந்த
தங்க தமிழ் தாயே நானென்று!

Wednesday 30 January 2013

பெண்மைக்கு வணக்கம்

பெண்ணே உன்னால் பிறவி கொண்டேனே,
வளர்பிறையாய் நான் வளர,
தேய்பிறையாய் நீ மறைந்தாயோ?
இடைவெளியாய் இருளை நான் உணர,
தாரமாய் மீண்டும் வந்தவள் நீதானோ?
தாரம் தந்த இன்பத்தில்,
தலைமைகளை கொண்டேனோ?
என் தாயை மீண்டும் கண்டேனோ?
தரை தவழ்ந்த முதல்,
தலை நரைத்த வரை,
ஈன்ற தாயாய்,
ஈசனில் பாதியை,
ஈன்றெடுத்த மகளாய்,
பேரு கொண்ட பெண்மைக்கு,
என் தமிழை கொண்டு தலை வணங்குகிறேன்!

என்றும் மாறாதது

அன்பே உறவுகள் மாறி போகலாம்
உரிமைகள் விட்டு பறிபோகலாம்
கவலைகள் கூடி போகலாம்
உள்ளமும் வாடி போகலாம்
என்றும் மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட அன்பு மட்டுமே
சுழல்காற்றும் திசைமாறி போகலாம்
அலைகடலும் கறைமீறி போகலாம்
சந்திரனும் சுடர்விட்டு எரியலாம்
சூரியனும் சூடு தணிந்து போகலாம்
என்றும் மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட அன்பு மட்டுமே
நறுமணமும் நாறி போகலாம்
இணைந்த மணமும் இருதுருவமாகலாம்
உயர்ந்த நட்பும் உடைந்து போகலாம்
உயிர்கொடுத்தவளும் உதவாமல் போகலாம்
என்றும் மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட அன்பு மட்டுமே
மாற்றமும் மாறி போகலாம்
காதலும் கசந்து போகலாம்
கானல் நீரும் தாகம் தணிக்கலாம்
பகற்கனவும் பலித்து போகலாம்
என்றும் மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட அன்பு மட்டுமே
தருமமும் தவறி போகலாம்
சத்தியமும் சாய்ந்து போகலாம்
சாய்ந்த மரமும் துளிர் விடலாம்
கூறிய வாளும் குத்தாமல் போகலாம்
என்றும் மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட அன்பு மட்டுமே
என் உணர்வுகளும் உறைந்து போகலாம்
உடலும் மெலிந்து போகலாம்
நாடி நரம்பும் தளர்ந்து போகலாம்
உயிரும் உடலை விட்டு பிரிந்து போகலாம்
என்றும் மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட அன்பு மட்டுமே

தமிழ் மாதங்கள்

தை பிறந்தால் வழி பிறக்கும்
தமிழர் வாழ்வில் வளம் கொழிக்கும்
மாசியில் மங்களம் சூடிடும்
புது வரவுகள் பொங்கிடும்
பங்குனியில் ஊரெங்கும் திருவிழா
தெருவெங்கும் தேரோட்டம்
சித்திரை வெயிலை இளநீர் பதநீர் தணிக்க 
சித்திரை விழாக்கள் கோலாகலமாகும்
வைகாசியில் வைபோகம் கன்னியரும் காளையரும்
மணமாலைகள் சூடிட மங்களமாகிடும்
ஆனியில் உச்சிவெயில் தணியும்
ஊரெல்லாம் மெல்லிய தென்றல் வீசும்

ஆடியில் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிடும்
உழவு ஆடிப்பட்டம் தேடி விதைக்கும்
ஆவணி வந்ததும் நல்வரவும் வந்திடும்
தடைகள் நீங்கி சுபகாரியங்கள் நிகழ்ந்திடும்
புரட்டாசி விரதம் மாந்தரின்
மனதை பக்குவப்படுத்த உதவிடும்
ஐப்பசி மழை அடை மழை
ஊரெல்லாம் தீவுபோல் காட்சியளிக்கும்
கார்த்திகையில் இல்லம்தோரும் அகல்விளக்கு
ஒளிர்ந்திட நன்மைகள் குடி புகுந்திடும்
மார்கழி குளிரில் வாசல்களில் கோலங்களும்
வயல்களில் வசந்தங்களும் பூத்திருக்கும்

ஏமாற்றம் 

கற்றறிந்தேன் என கவி எழுதி
உற்றுநோக்கின்
ஒன்றுமில்லை
நாட்கள் என்று
நொடிகள் மேல் கொண்ட பயணம்......

மரிக்க இயலா அழிதல் தேடி.... 

வியாபாரப் பொருளே
இங்கு வியாபாரியாய்...

பகடை காயின்
முகங்கள் காட்டும்
சுவாரசிய புதிராய்...

உணர்வுகள் அறுந்து
விலையாகும் நேரம்
ஏளனிக்கும் இதயம்...

இரையாகும் ஒவ்வொரு கணமும்
பசி தேடும்
அடுத்த வேளை மனமாய்...

மவுனங்கள் வீழ்ந்து கிடக்கையில்
வக்கிர மனங்களின்
வன்மங்கள் பேசும்...

மரிக்க இயலா அழிதல் தேடி
விளக்கில் வீழும் விட்டில்களாய்...
மீண்டும் மீண்டும்..!


என்னோடு நீ... 

என்றோ

என் சிறையிலிட்ட

உன் நினைவுகளின்று..

துரு கண்ட கம்பிகள்..

தானாய் வளைந்ததில்..

சுதந்திர பறவையாய்..

ஸ்வாசிக்க பறந்தன..!




உன் கண் நோக்கியதில்..

உள் நூறு சலனங்கள்..

மறந்தவை மகிழ்வோடு

பறந்தன சிறகடித்து..!




உன் நினைவுறங்கும் ஹ்ருதயம்..

உன் கைத் தணலில் என் விரல்கள்..




சேருமிடம் சேராது..

சென்ற வழி தோறும்..

நம் காலச் சுவட்டின்..

ஜோடிப் பாதமிரண்டை..

தளிர் நடை அலைகள்..

தயங்காது முத்தமிடும்..!




மணல்கள் பூவாய்..


தென்றலின் உதவி கொண்டு..!




பூஜைக்கு நேரமென்ன?

என்னில் நீ இருக்கையிலே..!

னக்கு மூன்று நண்பர்களே !!
ஒன்று "சூரியன்"
இன்னொன்று "நிலா"
மற்றொன்று "நீ"

பகலெல்லாம்
சூரியன்
இரவெல்லாம்
நிலா
வாழ்நாளெல்லாம்
நீ மட்டுமே..!
ண்ணால் பார்த்து
பின்னால் அலைந்து
சாகடிக்காமல் விடாத
சாகும்வரை மறக்காத
காதலை விட,
தன்னாலே வந்து
பின்னாளிலே உதவி
சாகவே விடாத
செத்தாலும் மறக்காத
நட்புக்கு ஒரு பாலம் கட்டுங்கள்..
லரை விட்டு பிரியாத
வாசம்
போல..!
கண்ணை
விட்டு பிரியாத
இமைகள்
போல..!
என்றும்
உன்னை விட்டு பிரியாத
நட்பு வேண்டும்...