Thursday 21 February 2013


ஒரு குழந்தையின் கண்ணீர்

நான் பிறந்த பொழுதோ கண் கொஞ்சும் அழகு
ஆனால் இன்றோ நான் காய்ந்து போன சருகு
என் அன்னை எனக்கு தாய்ப்பால் கொடுக்கவில்லை
என் உடலோ வேறு பாலுக்கு ஒத்துழைக்கவும் இல்லை
அதன் விளைவோ என் உடலை கரைத்து கொண்டிருக்கும் கிருமிகள்!
என் நலிந்த உடலில் பல அம்புகள் தோய்த்தது போன்ற உணர்வு
ஆயினும் என் தாய்ப்பாலின் ஏக்கம் என் அன்னைக்கு புரியவில்லை
வாழ்வின் கசப்பை மட்டுமே நான் அனுபவிக்கின்றேன்
தாய்பாலின் சுவை தெரிந்திருந்தால் இனிமையையும் அனுபவித்திருக்க முடியும்!
ஐந்தறிவு விலங்கான பசு கூட தன் கன்றிற்கு தன் பால் கொடுத்து தான் பசி ஆற்றும்
என் பிஞ்சு முகத்தை பார்த்தும் கூட என் அன்னைக்கு தோன்றவில்லை தாய்ப்பால் கொடுக்கவேண்டும் என்று
யாரேனும் உணர்த்துங்கள் என் அன்னைக்கு தாய்ப்பால் "அருமருந்து" என்று! by Ruthratcham call 9003452209

புல்லாங்குழல்

ஆம்! என்னவளும் ஒரு புல்லாங்குழல்தான்,
அதை வாசிக்க நினைத்தவர்களின் மத்தியில்
நேசிக்க நினைத்தவன் என்பதால்தான்
என்னவோ அதன் இசை ஸ்வரங்களை
என் இரு விழி நரம்புகளிலும் சுமக்கும்
வரம் கிடைத்தது ஒரு கணம்!!!!
என் இரு விழி நரம்புகளிலும் அதன்
இசை நாளங்களை இணைத்தேன்
உயிர் கொடுத்தேன் பின் உரு கொடுத்தேன்
உணர்வில்லாது நடமாடும் உலகம்
என்னவளின் சுவாசம் மட்டும் என்னுடன்...
சத்தியமாக சொல்கிறேன்
நான் தவறவிட்ட புல்லாங்குழலல்ல அவள்..
என்னிடமிருந்து தட்டிப் பறிக்கப்பட்ட புல்லாங்குழல்..
ஏனோ! அதை வாசிக்க நினைத்தவர்கள்
உறவுகள் என்பதாலா,
இல்லை அதற்கு நான் தகுதியற்றவன்
என்பதாலா???? by Ruthratcham call 9003452209

எழுதுகிறேன்...

ஆழமாய் தமிழ் படித்து
ஆணித்தனமாய் சொல்லெடுத்து
எதுகை மோனை எடுத்து வைத்து
உனை அப்படியே கவரும்
ரசனைக்குரிய வைரமுத்து
நானல்ல என்று...
இருப்பினும் எழுதுகிறேன்
அளவாய் தமிழ்படித்து
உண்மையாய் உன் நினைவெடுத்து
கண்ணீர் கறையை எடுத்துவைத்து
உனை முழுவதுமாய் நேசிக்கும்
ரசனைக்குரிய வியர்வைத்துளி
நான் மட்டுமே என்று by Ruthratcham call 9003452209

மழையோடு ஓர் நேர்முகம்

எப்போதாவது மண்ணைத் தொடும் மழையோடு ஒரு நேர்முகம்: -
தாங்கள் எப்போதாவதுதான் மண்ணைத் தொடுகிறீர்கள், உண்மைதானே?
ஆம்! எனை வரவேற்க மரங்களில்லை என்ற கோபம்தான்!
உங்கள் பொழுதுபோக்கு?
சுகமாய் மேகக் கூட்டங்களோடு சுற்றித் திரிவது!
உங்களுக்குப் பிடித்த விளையாட்டு?
மாடிவீடோ குடிசைவீடோ பல்லாங்குழிதான் எனக்குப் பிடித்த விளையாட்டு!
உங்கள் சந்தோஷம் எப்பொழுது?
புதிதாய் மலர்ந்த மலரினைத் தழுவும்போது!
உங்கள் துக்கம்?
கூரை கலைந்த குடிசைக்குள் நுழையும் போது.
எப்போதும் வேலையோ?
இல்லை! இடையிடையே
இலைகளில் இளைப்பாறிவிட்டுத்தான்
பூமியையே தொடுகிறேன்!
சரி! மண்வாசம் பற்றி ஏதேனும் கூறுங்கள்!
அது மழைக்கான வரவேற்பு!
மணமகளாய் மண்ணைத் தொடும் மழைக்கு சிற்சில "பாக்டீரியாக்கள்" தெளிக்கும் பன்னீர்!
வானவில்?
அவன்
என்னைக்
காதலிப்பவன்!
அப்படியானால் பூமி?
எனக்கும் பூமிக்குமான
நிச்சயதார்த்தம் அவனுக்குத் தெரியாது.
பிறகு / வானவில்?
எனைக் கவரவே
வர்ணம் உடுத்துகிறான்
கரைத்துப் பார்க்கிறேன் முடியவில்லை.
அப்படியா?
ஆம்! நீங்கள் கவிதையில் மட்டுமே வானை வளைப்பீர்கள்!
அவன் எனக்காக தன்னையே வளைத்து நிற்கிறான்!
இடியைப் பற்றி?
அது மேகங்களுக்கிடையிலான பஞ்சாயத்து! / யார் முதலில்
துளியாய் மாறுவதென
மேகங்களுக்குள்ளான பஞ்சாயத்து!
மின்னல்?
பஞ்சாயத்திற்கான வான வேடிக்கை!
மொத்தத்தில் பூமி!
என் காதலன்
எனையூற்றிக் கொண்டு கவியெழுதும் கவிஞன்!
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை - எனில் யார் யார் அந்த நல்லார்?
இரவல் முகந்தொலைத்தவன்
சுயநலம் விற்றவன்
மனிதத்தை நேசிப்பவன்
இவர்களைக் கழித்தால்
இரு வகையுண்டு.
ஒருவகை குழந்தைகள்; மற்றொன்று மனவளர்ச்சியில்லாதவர்கள்!
ஏன் இவர்கள் மட்டும், நாங்கள்?
இவர்களில் இரவல் முகமில்லை!
உங்களில்?
இவர்களில் சுயநலத்தின் சாயலில்லை!
உங்களில்?
சரி! இறுதியாய் மனிதர்களான எங்களைப் பற்றி ஏதேனும் கூறுங்கள்?
மன்னிக்கவும்! கருத்துகூற விரும்பவில்லை. by Ruthratcham call 9003452209

Thursday 31 January 2013

மானுடா!

வேதங்கள் நான்கு...
பூதங்கள் ஐந்து....
நாதங்கள் ஏழு....
மாதங்கள் பன்னிரண்டு...

இத்தனையும் இருந்தாலும்
பித்தனாம் மனிதனிடம்
எத்தனையோ பேதங்கள்....
எத்தனையோ பாவங்கள்....
அத்தனையும் மானுடத்தை
ஆட்டி வைக்கும் சாபங்கள்....

நண்பர்களே வாருங்கள்...
நேசக் கரம் தாருங்கள்...
நட்பென்னும் ஒளி வீசி
இருள் துடைப்போம் வாருங்கள்....

தாயின் துடிப்பு

 
உனக்காய் துடித்த ஓர் இதயம்
உனக்காய் மட்டுமே துடித்த ஓர் இதயம்
ரத்தத்தை உணவாய் மாற்றிய ஓர் இதயம்
அதை உனக்காய் பரிமாறிய ஓர் இதயம்
நீ கேட்டதெல்லாம் கொடுத்த ஓர் இதயம்
செய்த சேட்டை எல்லாம் பொறுத்த ஓர் இதயம்
இன்று துடிக்கிறது!
இன்றும் கூட துடிக்கிறது முதியோர் இல்லத்தில்!
என் மகன் எப்படி இருக்கிறானோ என நினைத்து?

தமிழ் தாய்

எழுந்ததும் வந்தாள் எனை நோக்கி
அவள் கண்கள் இரண்டையும் அனலாக்கி
அவள் கொண்ட பார்வையோ அனலாக
நான் நின்ற நிலையோ சிலையாக
வந்தது சிற்பமா? அல்ல
என் உயிர் போனது அற்பமா மெல்ல!
கொண்ட நிலை தெரியாது
வந்த நிலை புரியாது
மெல்லமாய் வினவினேன் அவளை
செல்லமாய் குலவினாள் அவளோ!
நிந்தன் தமிழ் பற்று கண்டு வந்த
தங்க தமிழ் தாயே நானென்று!